கூகுளை கேள்விகளால் துளைத்த இந்தியர்கள்! சுந்தர் பிச்சையின் பதிவு

தீபாவளியை பற்றி தெரிந்துகொள்ள இந்தியர்களால் அதிகம் கூகுளில் தேடப்பட்ட Why எனத் தொடங்கும் கேள்விகளை தீபாவளி வாழ்த்தினூடே தெரிவித்துள்ளார் கூகிள் CEO சுந்தர் பிச்சை.
கூகிளின் தேவை இந்த இணைய காலத்தில் மிக அத்தியாவசியமாகி உள்ளது. தெரியாத விடயங்களை தெரிந்து கொள்ளவும், சரிபார்த்தலுக்காகவும் பலதரப்பட்ட மக்களிடம் கூகிள் அன்றாடம் பயன்படுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தீபாவளியன்று, “தீபாவளி வாழ்த்துக்கள்” கூறிய கூகுள் நிறுவன CEO, இந்தியர்கள் அதிகம் கூகுளிடம் கேட்ட why எனத்தொடங்கும் 5 கேள்விகளை வெளியிட்டுள்ளார்.
1. ஏன் இந்தியர்கள் தீபாவளியை கொண்டாடுகின்றனர்?
2.ஏன் தீபாவளியன்று ரங்கோலி கோலமிடுகின்றனர்?
3. ஏன் தீபாவளியன்று விளக்குகள் ஏற்றுகிறார்கள்?
4. ஏன் தீபாவளியன்று லஷ்மி பூஜை செய்கிறார்கள்?
5. ஏன் தீபாவளியன்று எண்ணெய் குளியல் எடுக்கிறார்கள்?
ஆகிய கேள்விகள் ட்ரெண்டிங் ஆனதை தொடர்ந்து அவர் இதனை பகிர்ந்துள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!

1 comment

கூகுளில் தேடக்கூடாத வார்த்தைகள்! மீறினால் தண்டனை தான் - Namthesam Tamil News December 1, 2023 - 9:47 am
[…] எனவே அதுகுறித்து நீங்கள் கூகுளில் தேடினால் தண்டனைக்கு […]
Add Comment