இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்!

இலங்கையை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். அதிபர் மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்ற நிலையில், தற்போது சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய தரப்பினரை ஜெய்ஷங்கர் சந்தித்து வருகிறார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு சிறிலங்காவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் கிழக்கு மாகாண ஆளுந செந்தில் தொண்டமான் ஆகியோரால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அரசாங்கத்தின் கீழ் வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு பயணமாக இலங்கைக்கான பயணம் அமைந்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை (20) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த விஜயத்தின் போது இலங்கையில் இந்திய முதலீடுகள் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கவனம் செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் பின்னர், ​​இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் உறுதிப்படுத்தப்பட்டது. இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!