இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில்  இரண்டு படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் நேற்று மதியம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காகேசந்துறை  துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்,

இந்திய  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலையீட்டைத் தொடர்ந்து நேற்றிரவு உடனடியாக இந்திய மீனவர்கள் படகுகளுடன்  விடுவிக்கப்பட்டனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட செய்தி ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 நாள் பயணமாக நேற்று ராமேஸ்வரம் வந்த போது, மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் அவரை நேரில் சந்தித்து, கைது செய்யப்பட்ட அவரது உறவினர்களை படகுகளுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மீனவர்களின் கோரிக்கையை ஏற்ற இந்திய நிதியமைச்சர் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை தொடர்பு கொண்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, 22 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களை இலங்கை கடட்படையினரின் உதவியுடன்  இந்திய கடல் எல்லைவரை  அழைத்துச் சென்று . அங்கிருந்து இன்று காலை தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!