கடைசி போட்டியில் நியூசிலாந்துக்கு மரண அடி கொடுத்த பாகிஸ்தான்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

கிறிஸ்ட்சர்ச்சில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நடந்தது.

நிதானமாக ஆடிய முகமது ரிஸ்வான் 38 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தார்.

ஆனால் அதிரடி காட்டிய பஃஹ்கர் ஜமான் 16 பந்துகளில் 4 சிக்ஸர்கள் விளாசி 33 ரன்கள் எடுத்தார்.

டிம் சௌதீயின் மிரட்டலான பந்துவீச்சில் ரன் எடுக்க திணற பாகிஸ்தான் 134 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

மேட் ஹென்றி, பெர்குசன், சோதி மற்றும் சௌதீ தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, நவாஸ் மற்றும் இப்திகார் சுழற்பந்துவீச்சில் தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

கிளென் பிலிப்ஸ் மட்டும் ஒருபுறம் போராட, ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறியதால் நியூசிலாந்து 92 ரன்களுக்கு சுருண்டு, 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் (Glenn Phillips) 22 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் தரப்பில் இப்திகார் அகமது 3 விக்கெட்டுகளும், ஷாஹீன் ஷா அப்ரிடி மற்றும் முகமது நவாஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

ஏற்கனவே தொடரை இழந்து, 4 போட்டிகளில் தோல்வியுற்ற பாகிஸ்தான் அணி இதன்மூலம் ஆறுதல் வெற்றி பெற்றது.

தொடர் நாயகன் விருதை நியூசிலாந்தின் ஃபின் ஆலனும், ஆட்டநாயகன் விருதை பாகிஸ்தானின் இப்திகார் அகமதுவும் வென்றனர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!