பொருளாதார நெருக்கடியில் யாழில் வெந்நீருக்கும் விற்பனை விலை கோரிய உணவகம்..

யாழில் உணவகம் ஒன்றில் ஒரு கிளாஸ் வெந்நீருக்கு 100 ரூபாய் விற்பனை விலையாக அறவிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் உண்மையென உறுதிப்படுத்தியுள்ள உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், கட்டணப்பட்டியல் தேசிய நுகர்வோர் முன்னணி வசம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

“இதுபோன்ற ஒன்றைச் சம்பவமே நமக்குத் தெரியும். வெந்நீரோ, குளிர்ந்த நீரோ, இப்படி ஒரு கிளாஸ் தண்ணீருக்குக் கட்டணம் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கவலை அடைவத்காகவும், நுகர்வோர் அதிகாரசபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளத்காகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கிளாஸ் தண்ணீருக்கு பணம் வசூலிக்க நுகர்வோர் சட்டத்தில் இடமில்லை.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!