மியன்மாரில், இலங்கை மீனவர்கள் கைது..

மியன்மாரில், இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எவ்வித வழக்கும் இன்றி அவர்களை விரைவாக விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மியன்மார் உள்துறை அமைச்சுடன் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. .

கைதான மீனவர்களில் நான்கு பேர் நேயாளிகள் எனவும் மியன்மாருக்கான இலங்கை தூதுவர் கூறியுள்ளார்.

அத்துடன், ஒவ்வொரு வருடமும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கை மீனவர்கள் மியன்மார் அரசால் கைது செய்யப்படுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மியன்மார் கடல் எல்லைக்குள், அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 2 மீன்பிடி படகுகளுடன் 15 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கற்பிட்டி, நீர்கொழும்பு பகுதிகளில் இருந்து ரயன்புத்தா மற்றும் லோரன்ஸ் ஆகிய மீன்பிடி படகுகள் மூலம் மீன்பிடிக்கச் சென்ற குறித்த மீனவர்கள் கடந்த 2 ஆம் திகதி மியன்மாரில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!