பரீட்சைகள் திணைக்களத்தில் முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் நாளை (23) முதல் பெப்ரவரி 15ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சகல பாடசாலை விண்ணப்பதாரிகளும் பாடசாலை அதிபர் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட முறையிலும் உரிய அறிவுறுத்தல்களுக்கமைய விண்ணப்பிக்க வேண்டும்.

அரச பாடசாலை அல்லது அரசினால் அனுமதிக்கப்பட்ட தனியார் பாடசாலையிலிருந்து விலகி விடுகைப் பத்திரத்தை பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரிகள் மாத்திரமே இப்பரீட்சைக்கு தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர்.

இவ்வாண்டு தொடக்கம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பிக்கவிருக்கும் சகல தனிப்பட்ட விண்ணப்பதாரிகளிடமும் தேசிய அடையாள அட்டை இருப்பது கட்டாயமானதாகும்.

தேசிய அட்டை இல்லாத 15 வயதுக்கு குறைவாக உள்ள தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக தோற்றுவதற்கு எதிர்ப்பார்ப்பின் அவர்கள் பரீட்சைத் திணைக்களத்துக்கு வருகைத் தருவது கட்டாயமானதாகும்.

2024 பெப்ரவரி 15ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு பின்னர் இப்பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது. அத்தினம் நள்ளிரவு 12.00 மணிக்க பின்னர் நிகழ்நிலை முறைமை நிறுத்திவைக்கப்படும். எக்காரணத்திற்காகவேனும் விண்ணப்ப முடிவுத்திகதி நீட்டிக்கப்படமாட்டாது என்பதை கவனத்திற்கொள்ளவும். எனவே விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதிக்கு முன்னர் விண்ணப்பம் சமர்ப்பித்தல் கட்டாயமானதாகும்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!