வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பொதுத்தேர்தேல் நெருங்குவதால், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் பலரும் தேர்தலில் வாக்களிக்க தங்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து வரும் பொதுத்தேர்தலில் அவர்கள் வாக்களிக்க அனுமதிப்பது பற்றி தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கோரிக்கையை சிவில் சமூக அமைப்பு, தேர்தல் ஆணையகுழுவிடம் முன்பு வைத்திருந்தது.

அதில், “வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள், இரட்டை குடியுரிமை பெற்ற இலங்கையர்கள் ஆயிரக்கணக்கான பேர், இலங்கையில் நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க ஆர்வமாக இருக்கின்றனர். இதனால், அவர்கள் அந்தந்த நாடுகளில் இருந்தே, இலங்கையில் நடைபெறும் தேர்தலுக்கு வாக்களிக்க ஏற்பாடுகளை செய்யும்படி” வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில், தற்போது இந்த கோரிக்கைக்கு, தேர்தல் ஆணையத்திடம் இருந்து சாதகமான பதில் சிவில் சமூக அமைப்புக்கு கிடைத்துள்ளது. இதனால், இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருந்து வாக்களிக்கும் வாய்ப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!