மத்திய வங்கி புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், திறைசேரி உண்டியல் ஏலம் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் போது, 160,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, 91 நாட்களில் முதிர்வடையும் 45,000 மில்லியன் ரூபாவும், 182 நாட்களில் முதிர்வடையும் 45,000 மில்லியன் ரூபாவும், 364 நாட்களில் 70,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலம் விடப்படும்.
இதேவேளை, 110,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், கடந்த 17ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.