கனேடிய அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

கனடாவில் தற்போது வேலையின்மை மற்றும் வீட்டு நெருக்கடி பிரச்சினைகள் அதுகரித்து வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கனேடிய அமைச்சர் மார்க் மில்லர், அடுத்த மாதங்களில் கனடாவில் வசிக்கக்கூடிய வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்வதாக அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு 4,85,000 புதிதாக குடியேறியவர்களும், 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டிலும் 5,00,000 பேர் புதிதாக வருபவர்கள் என பதிவாகியுள்ளது.

இதற்கு முன்பு அரசாங்க ஊழியர்கள், இந்தக் கொள்கைகளால் வீடு வாங்கும் விலையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அரசாங்கத்தை எச்சரித்துள்ளனர்.

மேலும், சர்வதேச மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போன்ற தற்காலிக குடியிருப்பாளர்களால் வீட்டுப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டின் பாதியில் மட்டுமே 3 லட்சத்துக்கும் அதிகமான தற்காலிக குடியிருப்பாளர்கள் கனடாவிற்கு வந்துள்ளனர்.

 

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!