தரமற்ற மருந்து இறக்குமதி – பிரதான நபர் அமைச்சரவையில்!!!

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து குப்பிகளை இறக்குமதி செய்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்த வழக்கின் மூளையாக செயற்பட்டவர் அமைச்சரவையில் இருப்பதாகவும், முடியுமானால் அவரைக் கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சவால் விடுத்துள்ளதாக சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ நேற்று மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரமவிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இந்ததிஸ்ஸ மேலும் கூறுகையில்,
நீதிமன்றம் என்ன நினைத்தாலும் இந்த குற்றத்தில் ஈடுபட்ட இருவரையும் பொலிசார் கைது செய்யமாட்டார்கள்.
டெண்டர் நடைமுறையை பின்பற்றாத உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல், முறையான டெண்டர் நடைமுறையை அப்பாவித்தனமாக பின்பற்றிய தனது கட்சிக்காரரை கைது செய்தது ஏன் என்றும் பி.சி.இந்ததிஸ்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதவான் சந்தேகநபரின் பிணை கோரிக்கையை நிராகரித்ததுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

1 comment

40 மருத்துவமனைகளுக்கு பூட்டு!! - Namthesam Tamil News November 28, 2023 - 7:43 pm
[…] அபாயத்தை தடுக்கும் வகையில், குறித்த வைத்தியசாலைகளுக்கு அவசியமான உத்தியோகத்தர்களை சேவையில் […]
Add Comment