கனடாவில் இருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர்!

கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்களில் 15% பேர் 20 ஆண்டுகளுக்குள் வேறு நாடுகளுக்கோ அல்லது தங்கள் சொந்த நாடுகளுக்கோ திரும்புவது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கனடாவில் உள்ள புள்ளியல் துறை, கடந்த 1982 முதல் 2017 வரை கனடாவில் இருந்து வெளியேறிய புலம்பெயர்ந்தோர் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதில், கனடாவில் நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்ற 5 ஆண்டுகளுக்குள், புலம்பெயர்ந்தோரில் 5.1% பேர் நாட்டை விட்டு வெளியேறுவது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, பல ஆண்டுகளுக்கு முன்பு கனடாவிற்கு புலம்பெயர்ந்தவர்களைவிட, சமீபத்தில் புலம் பெயர்ந்தவர்களே இப்படி ஒரு முடிவை எடுப்பதாக கூறப்பட்டுள்ளது.

இப்படி அவர்கள் வெளியேறுவதற்கு முக்கிய காரணம், பொருளாதார அடிப்படையில் கனடாவுடன் ஒருங்கிணைந்து வாழ முடியாத நிலை, வெளிநாட்டு கல்விக்கு அங்கீகாரம் கிடைக்காதது, வீடு பற்றாக்குறை, அதிக வீட்டு வாடகை, விலைவாசி போன்றவை இருந்துள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!