மலேசியாவின் புதிய மன்னராக பதவியேற்றார் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர்

மலேசியா நாட்டின் 17வது மன்னராக சுல்தான் இப்ராஹிம் இப்னி இஸ்கந்தர் பதவியேற்றார்.

ஆசிய நாடான மலேசியா ஒரு அரசியலமைப்பு முடியாட்சியாகும். அங்குள்ள 9 சுல்தான்கள் அல்லது ஆட்சியாளர்கள் தான் தங்கள் மாகாணங்களின் தலைவர்களாகவும், மதத் தலைவர்களாகவும் செயல்படுகின்றனர்.

இந்த நிலையில், மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவின் பதவிக் காலம் நேற்று நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, புதிய மன்னராக சுல்தான் இப்ராஹிம் இப்னி இஸ்கந்தர் தெரிவு செய்யப்பட்டார்.

கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில், பிற தலைவர்கள் முன்னிலையில் சுல்தான் இப்ராஹிம் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவி பிரமாணப் பத்திரங்களில் கையெழுத்திட்டார்.

கோலாகலமாக நடைபெற்ற இந்த பதவியேற்பு விழா தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நாட்டின் துணை தலைவராக பேராக் மாகாணத்தின் ஆட்சியாளரான சுல்தான் நஸ்ரின் ஷா, அடுத்து 5 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!