கடந்த இரு தினங்களாக, 58 வயதில் டிகிரி படித்து பட்டங்களை வென்ற நகைச்சுவை நடிகர் முத்துக்காளைப் பற்றிதான் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தான் ஆரம்ப காலகட்டத்தில் குடித்துவிட்டு, பல இடங்களில் பட்ட அவமானங்கள் குறித்தும், அதிலிருந்து திருந்தி தான் இப்போது செய்த சாதனை குறித்தும் பெருமையாக முத்துக்களை பேசி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுவோடு அதிகமான படங்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் முத்துக்காளை.
இவருடைய காமெடியான நடிப்பு பலரையும் கவர்ந்திருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு ஃபேவரைட் நடிகராக இவர் இருக்கிறார்.
அதுபோல முத்துக்களை “என் புருஷன் குழந்தை மாதிரி” என்ற திரைப்படத்தில் எல்லோருக்கும் சட்டென நினைவிற்கு வரும், “செத்து செத்து விளையாடுவோமா..” என்ற வசனம் மூலமாகத்தான் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்தார்.
அதற்கு பிறகு பல நடிகர்களோடு நகைச்சுவை கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் சில வருடங்களாக அதிகமாக சினிமாவில் இவர் வரவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில் என்னுடைய சொந்த ஊர் ராஜபாளையம், சங்கம்பட்டி. என்னுடைய கனவு ஃபைட் மாஸ்டர் தான். புரூஸ் லீ, ஜாக்கிசான் படம் தான் எனக்கு ரொம்ப பிடித்தது.
12 வயசுலயே சண்ட கத்துக்க ஆரம்பிச்சேன். அதற்குப் பிறகு 18 வயசுல கராத்தேல பிளாக் பெல்ட் வாங்கிட்டேன்.
20 வயசில் கராத்தே கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் என்னிடம் கராத்தே கத்துக்கிட்டாங்க.
ஸ்டாண்டு சிவா, மாஸ்டர் வின்சென்ட் செல்வா, வடிவேலு இவங்க தான் என்னுடைய வாழ்க்கையை மாற்றி எனக்கு சரியான பாதை அமைத்துக் கொடுத்தாங்க.
நான் நடிச்ச முதல் படமான “இரணியன்” அப்புறமா வந்த “பொன்மனம்” போன்ற படங்களில் நான் காமெடியாக நடிக்க ஆரம்பிச்சேன்.
அந்த படத்தில் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார் ஸ்டண்ட் பண்ணிட்டு இருந்த எனக்கு காமெடி செட் ஆகும்னு சொன்னப்ப அவருதான் எனக்கு காமெடியான கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வாங்கி தந்தார்.
ஏற்கனவே எனக்கு ஃபைட் தொழில் இருக்கு நடிப்பு வந்தா வரட்டும் வரலைன்னா போகட்டும் என்கிற ரீதியில் தான் கேமரா முன்னாடி இருந்தேன்.
இதுவரைக்கும் 240 படங்களுக்கு மேல நடிச்சி இருக்கிறேன். இப்போது நான் மூன்று பட்டம் பெற்று இருக்கிறேன்” என்று பேசி இருக்கிறார்.
அதாவது நடிகர் முத்துக்காளை இளங்கலை தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றிருக்கிறார். நேற்று வெளியான B.Lit மூன்றாம் ஆண்டு தேர்வில் முதல் வகுப்பில் தேர்வு பெற்று இருக்கிறார். 58 வயதான முத்துக்களை இந்த வயதில் சாதனை படைத்திருக்கும் விடயத்திற்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.