DeepFake வீடியோக்களை எப்படி கண்டுபிடிப்பது? எளிய விளக்கம்

சமீபத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து போலியான வீடியோவை chat GPT மூலம் உருவாக்கி வெளியிட்டது சர்ச்சைக்குரிய விடயமாக மாறியது.
ரஷ்மிகா இதுகுறித்து வேதனையுடன் புகார் கூறியதைத் தொடர்ந்து பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்தன.
அதனைத் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சைபர் பொலிஸார் தரப்பில் எச்சரிக்கப்பட்டது.
ஆனால், நடிகை கஜோலையும் DeepFake செய்து யாரோ சமூக வலைத்தளத்தில் பரவ விட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை Deep fake போலி புகைப்படம் மற்றும் வீடியோக்களை எப்படி கண்டுபிடிப்பது என்றால், அதற்கு பல வழிமுறைகள் உள்ளன.
இவை அனைத்தும் செயற்கைத் தொழில்நுட்பம் முறையில் உருவாக்கப்படுவதே என்பதால் எளிதாக கண்டுபிடிக்கலாம்.
போலி வீடியோ வெளியிட்டால் முகத்தோற்றம் சற்று வித்தியாசமாக காணப்படும்.
செயற்கை தொழில்நுட்ப முகமானது இயற்கைக்கு மாற்றாக இருக்கும்.
முகத்தில் அசைவுகள் காணப்படாது,கண் இமைகளின் இயக்கம் வித்தியாசமாக இருக்கும். சூழலுக்கு ஏற்ப முகம் காணப்படாது, இப்படி ஏதேனும் காணப்பட்டால் அது கண்டிப்பாக போலி வீடியோ ஆகும்.
மேலும், கண்களில் முகத்தோற்றம், மூக்கு, வாய், உதடுகளின் அசைவுகளில் மாற்றம் காணப்பட்டால் அது கண்டிப்பாக போலியானவையே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, போலி வீடியோக்கள் உயர்தரத்தில் இருக்காது சுலபமாக கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?