இன்று முன்னேற்றம் காணப்போகும் ராசிக்காரர்கள்!

கார்த்திகை மாதம் 17ம் நாள். 03 டிசம்பர், 2023. ஞாயிற்றுக்கிழமையான இன்று இரவு 10:45 வரை பூராடம், அதன் பின்னர் உத்திரம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தடைகளை சுக்குநூறாக்குவீர்கள். புதிய முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்தினர் சில சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, தொழிலில் வளர்ச்சியை காண்பீர்கள். லாபமும் அதிகரிக்கும். பெரிய பதவிகளில் உள்ளவர்கள் நட்பு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தொழில் போட்டிகள் குறையும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் நாள்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, வேலையை செய்து முடிப்பதற்கு, நீங்கள் உங்களை நம்புவதே சிறந்தது. வியாபாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் வந்துபோகும். அனைவரிடமும் கனிவுடன் பேசிப் பழக வேண்டிய நாள்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, அலைச்சல் அதிகரிப்பதால் சோர்வு உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. கவனத்துடனும், பொறுமையுடனும் இருப்பது நல்லது.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். கடனில் கணிசமான பகுதியை அடைப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிப்பீர்கள். பணவரவு உண்டு. நண்பர்களால் ஆதாயம் கிட்டும். உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும். கணவன் மனைவியிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். உறவினர்களால் நல்ல செய்திகள் வந்தடையும்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தினரிடம் கனிவாக பழகுங்கள். எதிர்பார்த்த விடயங்கள் தாமதமாகலாம். சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
மகரம்:
மகர ராசி நேயர்களே, உறவினர்களிடத்தில் மரியாதை கூடும். கடினமான காரியங்களையும் உங்கள் புத்திக்கூர்மையால் எளிதாக செய்து முடிப்பீர்கள்‌. வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, தொழில் வளரும். பால்ய நண்பர்களுடன் பேசி மகிழ்வீர்கள். எதிர்பாராத பணவரவு வரலாம்‌. வழக்குகள் சாதகமாக அமையும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, இன்று சிக்கனமாக செலவு செய்தால் நல்லது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்தடையும். குடும்பத்திலும், சமூகத்திலும் மரியாதை அதிகரிக்கும்.

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024