வீடு புகுந்து தலைவர் சுட்டுக்கொலை! பதற்றத்தில் ராஜஸ்தான் மாநிலம்

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனாவின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் சுக்தேவ் சிங் கொஹமெதி (Sukhdev singh gogamedi).
இவர் 2015ஆம் ஆண்டில் ஶ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா என்ற அமைப்பை தொடங்கினார்.
இதற்கு காரணம் அவர் இருந்த அமைப்பான ஶ்ரீ ராஜ்புத் கர்னி சேனாவின் தலைவர் லோகேந்திர சிங் உடனான கருத்து வேறுபாடு தான்.
அதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு சர்ச்சையில் சிக்கிய இந்தி திரைப்படமான பத்மாவத் தை எதிர்த்து சுக்தேவ் சிங் போராட்டங்களை நடத்தினார்.
இந்த நிலையில் சுக்தேவ் சிங் தனது வீட்டில் வைத்து சில நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அவரைக் காண வீட்டிற்கு வந்த மூவர் சுக்தேவ் உடன் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுக்தேவ் சிங்கை சரமாரியாக சுட்டனர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து தாக்குதல் நடத்திய நபர்களை நோக்கி சுக்தேவ் சிங்கின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்.
ஏனைய இருவர் அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் ஶ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதன் காரணமாக அம்மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!