மட்டக்களப்பில் வீடுகள் பறிமுதல்: எச்சரிக்கை தகவல்

மட்டக்களப்பில் உரிமையாளர் இல்லாத வீடுகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேற்று(பிப்.6) நடைபெற்ற செங்கலடி அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில், மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் நிரந்தரமாக குடியிருக்காத, உரிமையாளர்கள் இல்லாத வீடுகளை மீளப் பெற்று அவைகளை வீடுகள் இல்லாதவர்களுக்கு வழங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிரதேச செயலாளர், வீடமைப்பு அதிகார சபை, காணி சீர்திருத்த ஆணைக்குழு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் பல வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பலர் வீடுகளை ஓய்வு விடுதிகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், எத்தனையோ குடும்பங்கள் தங்குவதற்கு வீடுகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே, கிராம சேவகரின் உதவியுடன் குடியிருப்பாளர்கள் இல்லாத வீடுகளுக்கு அறிவித்தல் ஒட்டப்படும். ஒட்டப்பட்ட 15 நாட்களுக்குள் உரிமையாளர்கள் வராத வீடுகள் கையக்கப்படுத்தி, வீடுகள் இல்லாதவர்களுக்கு வழங்க உள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!