பிரேசிலில் கனமழை

பிரேசிலில் கனமழை பெய்து வரும் நிலையில் ரியோடி ஜெனிரோ மாகாணத்திலும் கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக அம்மாகாணத்தில் உள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!