இந்த 5 ராசிக்காரர்களுக்கு 2024யில் ஆரோக்கியம் பாதிக்கும்..

அடுத்த ஆண்டில் கிரக மாற்றங்கள் ஏற்படுவதனால் சில ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகும்.

மேஷம், கடகம், சிம்மம், கன்னி, மீனம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களே 2024ஆம் ஆண்டில் தனது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

மேஷம்: மேஷ ராசி நேயர்களே நீங்கள் 2024ஆம் ஆண்டில் ஆரோக்கியத்தில் குறைபாட்டை காண்பீர்கள்.
மேஷ ராசியில் 12ஆம் வீட்டில் ராகுவும், 9ஆம் வீட்டில் கேதுவும் இருப்பதால் கடினமான நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.எனவே நீங்கள் உடற்பரிசோதனை செய்து ஆரம்பத்தியிலேயே உடலில் உள்ள பிரச்சனைகளை கண்டறிந்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடகம்: கடக ராசி நேயர்களுக்கு உடலில் வெப்பநிலை அதிகரிப்பால் தலைவலி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் உடலில் ஏற்படும்.எனவே நீங்கள் காரமான உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். நீங்கள் வயிறு, கல்லீரல் ஆகிய உறுப்புகளில் பித்தம் காரணமாக அவதியுறுவீர்கள்.

சிம்மம்: சிம்ம ராசி நேயர்களே உங்களுக்கு 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில், உடலளவில் சற்று பலவீனமாக இருப்பீர்கள். அதாவது நீங்கள் உடல் உபாதைகளையும், துன்பங்களையும் சந்திக்க நேரிடும் வாய்ப்பு அதிகம்.
ஆனாலும் உங்களுக்கு எதிர்பாராத நோய்கள் ஏற்பட்டாலும் அவை மிக விரைவில் குணமடைந்துவிடும்.

கன்னி: கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசியில் ஏழாம் வீட்டில் ராகுவும், கேதுவும் தங்குவதால் மன உளைச்சல் உண்டாகும். அதேபோல் 6வது வீட்டில் சனி இருப்பதால் உங்களுக்கு அடிக்கடி உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்.
எனவே நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவில்லையெனில் பலவிதமான நோய்கள் ஏற்படும்.

மீனம்: மீன ராசி நேயர்களே உங்களுக்கு கண் சம்பந்தமான பிரச்சனை ஏற்படும். அதே போல் கால்களில் வலி, கணுக்கால் வலி, காயம், சுளுக்கு போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். அதேபோல் மனதை சமநிலையில் வைத்துக் கொள்ளவும் யோகா, தியானம் அல்லது இயற்கையில் நேரத்தை செலவிடுங்கள்.

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024