உணவளிக்காமையால் யாசகரால் சரமாறியாக தாக்கப்பட்ட பெண்

கொழும்பில் யாசகர் ஒருவருக்கு சாப்பாடு வழங்க தாமதமாகியதால் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரின் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.

இவ்வாறு தாக்கிய யாசகர் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த யாசகரின் அவரின் மனநல அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த ஹோட்டலில் உள்ளவர்கள் அந்த யாசகனுக்கு கடந்த 13 வருடங்களாக தினமும் சாப்பாடும் பானமும் கொடுத்து வந்திருக்கின்றார்.

சம்பவதினமன்று சாப்பாடு தாமதமாகியதால் ஆத்திரமடைந்த யாசகர்,

கடை உரிமையாளரின் மனைவியின் தலையில் சரமாரியாக தாக்கி, கண்ணுக்கு மேல் தாக்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

குறித்த யாசகர் மஹியங்கனைக்கு அருகில் உள்ள முதியோர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றவர் எனவும் தெரியவருகின்றது.

 

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!