உடல் எடையை குறைக்க இதை செய்து பார்த்தீர்களா?

உடல் பருமன் என்பது எப்போதும் பலருக்கு பிரச்சினையாகவே இருந்து வருகிறது.
அதிகப்படியான உடல் பருமன் பல நோய்களின் புகலிடமாகவே விளங்குகிறது.
பல மரணங்களுக்கு காரணமாக உள்ள உடல் பருமனை குறைப்பதன் மூலம் உயிரையும், ஆரோக்கியத்தையும் பேணிப் பாதுகாக்க முடியும்.
உணவு முறையில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம் அதிகப்படியான உடல் எடையை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
அதன்படி மாற்று உணவு முறையில் கொண்டைக்கடலை ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
புரோட்டீன், மாவுச்சத்து, கலோரி, ஃபோலிக் ஆசிட், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய தாது உப்புக்களை கொண்டைக்கடலை தன்னகத்தே கொண்டுள்ளது.
1 கப் கொண்டைக்கடலையில் 12.5 கிராம் நார்ச்சத்து இருக்கின்றது.
கருப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் கொண்டைக்கடலைகள் கிடைக்கின்றன.
அதில் கருப்பு கொண்டைக்கடலையில் அதிகப்படியான நார்ச்சத்து இருக்கின்றது.
அதை முளைகட்டி சாப்பிட்டு வருவதால் உடலின் கொழுப்பு வெகுவாக கரைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
பொதுவாக இரத்த நாளங்களில் கொழுப்பு படர்வதை கொண்டைக்கடலை தடுக்கிறது.
இதனால் உடலில் கொழுப்பு தங்காது.
மேலும் தலைமுடி உதிர்தல் மற்றும் சரும பராமரிப்பை மேற்கொள்பவர்களுக்கு கொண்டைக்கடலை ஒரு வரப்பிரசாதம் தான்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவர்களை அணுகவும்)

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை கிளாஸ் பால் குடிக்க வேண்டும்?

கோடை கால வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்!

வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இத ட்ரை பண்ணுங்க!

1 comment

சிக்கன் சாப்பிட்டாலும் உடல் எடை குறையும்! எப்படி தெரியுமா? - Namthesam Tamil News November 25, 2023 - 10:26 pm
[…] பலர் பல வழிகளில் அதிகப்படியான உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு […]
Add Comment