ஹாரி கேனின் இரட்டை கோலில் Bayern Munich மிரட்டல் வெற்றி

Soccer Football - Bundesliga - Bayern Munich v RB Leipzig - Allianz Arena, Munich, Germany - February 24, 2024 Bayern Munich's Harry Kane celebrates scoring their first goal with Thomas Mueller and teammates REUTERS/Angelika Warmuth

பண்டஸ்லிகா தொடரில் Bayern Munich அணி 2-1 என்ற கோல் கணக்கில் RB Leipzig அணியை வீழ்த்தியது.

Allianz Arena மைதானத்தில் நடந்த போட்டியில் Bayern Munich மற்றும் RB Leipzig அணிகள் மோதின.

ஆட்டத்தின் 5வது நிமிடத்தில், Bayern அணியின் நட்சத்திர வீரர் ஹாரி கேன் தலையால் முட்டி அடித்த ஷாட் கோல் கம்பத்தில் பட்டு திரும்பியது.

அதனைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்க போராடினாலும், 42வது நிமிடத்தில் ஹாரி கேன் bicycle kick  அடித்தார்.

ஆனால் கோல் கீப்பர் அதனை அசால்ட்டாக தடுத்துவிட்டார். இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் முதல் பாதி கோல் இன்றி முடிந்தது.

பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியின் 56வது நிமிடத்தில், Bayern வீரர் முசியாலா பாஸ் செய்த பந்தை ஹாரி கேன் அபாரமாக கோலாக மாற்றினார்.

அதற்கு பதிலடியாக RB Leipzig வீரர் பெஞ்சமின் செஸ்க்கோ 70வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இதனால் ஆட்டம் 90 நிமிடங்கள் வரை சமநிலையில் சென்றது. 90+1வது நிமிடத்தில் ஹாரி கேன் மீண்டும் ஒரு கோல் அடிக்க, Bayern Munich அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம்Bayern Munich 53 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!