Desert Vipers அணியை தவிடுபொடியாக்கிய பூரன் – குசால் பெரேரா

Desert Vipers அணிக்கு எதிரான டி20 போட்டியில் MI எமிரேட்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

MI எமிரேட்ஸ் – Desert Vipers அணிகளுக்கு இடையிலான போட்டி அபுதாபியில் நடந்தது.

முதலில் ஆடிய MI அணியில் தொடக்க வீரர் குசால் பெரேரா அதிரடியாக 46 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார்.

அவரைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடு 44 (38) ரன்களும், கேப்டன் பூரன் 15 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தனர்.

இதன்மூலம் MI எமிரேட்ஸ் அணி 188 ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய Desert Vipers அணி, பரூக்கியின் புயல்வேகத்தில் விக்கெட்டுக்களை இழந்தது.

45 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை அந்த அணி பறிகொடுத்த நிலையில் அலி நசீர் அணியை சரிவில் இருந்து மீட்டார்.

ஆனாலும், Desert Vipers அணியால் 20 ஓவர்களில் 158 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் 30 ரன்கள் வித்தியாசத்தில் MI அணி வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக அலி நசீர் 63 (47) ரன்களும், லுக் வுட் 30 (21) ரன்களும் எடுத்தனர்.

MI எமிரேட்ஸ் அணியின் தரப்பில் பாசல்ஹக் பரூக்கி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

4 கேட்சுகள் பிடித்த பூரன் ஆட்டநாயகன் விருதாக 1,500 டொலர்கள் வென்றார்.

அதே சமயம் குசால் பெரேரா பாரிய சிக்ஸர் அடித்ததற்காக 1,500 டொலர்கள் பரிசு பெற்றார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!