சுற்றுலா சென்ற இடத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் என 16 பேர் மரணம்!

இந்திய மாநிலம் குஜராத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என 16 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் வாதோரா பகுதிக்கு பள்ளி ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சுற்றுலா சென்றுள்ளனர்.

27 மாணவர்கள் ஆசிரியர்களுடன் படகு சவாரி செய்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில் 2 ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் என 16 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து மீட்பு படையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து, நீரில் தத்தளித்தவர்களை காப்பாற்றி கரையில் சேர்த்தனர்.

இச்சம்பவம் பேரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த விபத்திற்கு கவலை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000-மும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!