RCBக்கு அடி கொடுத்து குஜராத் முதல் வெற்றி

டெல்லியில் நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது.

WPLயின் நேற்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.

வோல்வார்ட் மற்றும் கேப்டன் மூனே கூட்டணி ருத்ர தாண்டவம் ஆடியது. இதன்மூலம் முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் கிடைத்தது.

அரைசதம் விளாசிய வோல்வார்ட் 45 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் விளாசிய நிலையில் ரன் அவுட் ஆனார்.

அடுத்து வந்த லிட்ச்பீல்டும் 18 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதன் பின்னர் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில், மூனே 51 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார்.

இதன்மூலம் குஜராத் அணி 199 ரன்கள் எடுத்தது. வாரெஹம், மொலினீஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய RCB அணியில் மேகனா 4 ரன்னில் வெளியேற, மந்தனா மற்றும் எல்லிஸ் பெர்ரி தலா 24 ரன்கள் எடுத்தனர்.

அதிரடி காட்டிய சோபி டிவைன் 16 பந்துகளில் 23 ரன்கள் விளாசினார். அடுத்து ரிச்சா கோஷ் 30 ரன்கள் குவித்தார்.

எனினும் குஜராத் அணியின் துல்லியமான பந்துவீச்சினால் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

ஜார்ஜியா வாரெஹம் 22 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் குவித்தார். அஷ்லேயி 2 விக்கெட்டுங்கள் வீழ்த்தினார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!