வாட்சப்பின் புதிய திருத்தம்

இந்த காலகட்டதில் அனைவருமெ பயன்படுத்தும் வாட்ஸ்அப் இணையத்தளமானது நாளுக்கு நாள் புதிய அப்டேட்களை வழங்கி புதிய அம்சங்களையும் சேர்த்து வருகிறது.

மக்களின் நாளாந்த வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு செயலியாகவும் மாறிவிட்டது.

உலக பிரசித்தி பெற்ற மெட்டொ நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்அப் அண்மைய நாட்களில் பலருக்கு பச்சை நிறத்துக்கு மாறியுள்ளது.

வாட்ஸ்அப்பின் எழுத்துருக்கள் உள்ளிட்ட விடயங்கள் அனைத்தும் பச்சை நிறமாக மாறி இருப்பினும், இது முன்னறிவிக்கப்படாத ஒன்றாகும்.

இதுகுறித்து சமூக ஊடகங்களில் பலரும் அதிருப்தியை தெரிவித்து வருவதைக்கூட காணமுடிகிறது.

இதுதொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மற்றும் செய்தி தளங்களை ஆராய்ந்த போது, அதில் இது குறித்த எந்த விடயங்களும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

எனினும் வாட்ஸ்அப் குறித்த தகவல்களை பரிமாறுகின்ற இணையத்தளங்கள் பலவற்றில், தெரிவு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மாத்திரம் இவ்வாறு பச்சை நிற எழுத்துருக்களை வாட்ஸ்அப் அமுலாக்கி பரிசோதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!