வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு Gpay அறிவித்த அசத்தல் அறிவிப்பு

உலகம் முழுவதும் UPI மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிவர்த்தனை செய்ய Google Pay அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் UPI Payment-களை பயன்படுத்தி எளிதாக பரிவர்த்தனை செய்யலாம்.

இதற்காக Google Pay புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் NIPL (NPCI International Payments Limited) நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், வெளிநாடுகளில் சுற்றுலாவில் இருக்கும் இந்தியர்கள் பணம் செலுத்துவதை எளிமையாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் மாற்றுவதற்கான மற்றொரு படியாக இருக்கும் என Google Pay  இந்தியா பார்ட்னர்ஷிப் இயக்குனர் திக்ஷா கௌஷல் தெரிவித்தார்.

மேலும் வெளிநாட்டு வணிகர்கள், டிஜிட்டல் பணம் செலுத்துவதற்கு வெளிநாட்டு நாணயம், கடன் மற்றும் வெளிநாட்டு நாணய அட்டைகளை மட்டுமே நம்பி இருக்கும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த ஒப்பந்தம் மூலம் அணுகல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு டிசம்பரில் UPI மூலம் 1,202 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு புதிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!