ஆண்ட்ராய்டு போன் செட்டிங்ஸ்-க்கு வரும் Speaking Practice அம்சம்!

கூகுள் நிறுவனம் தொடர்ந்து புதிய தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுவருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் ஆங்கிலம் பேசும் திறனை வளர்க்க கூகுள் ‘Speaking Practice’ என்ற புதிய அம்சத்தைக் கொண்டுவந்துள்ளது.

அதாவது கூகுள் சர்ச் (Google Search) ஆனது உங்களுடைய ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்தப் புதிதாக Speaking Practice அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இது ஒரு கூகுள் சர்ச் லேப்ஸ்-இன் திட்டம் ஆகும். தற்போது, அர்ஜென்டினா, கொலம்பியா, இந்தியா, இந்தோனேசியா, மெக்சிகோ மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் இந்த புதிய அம்சம் வழங்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஏஐ (AI) மற்றும் language learning exercises மூலம் இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்த முடியும் என்று கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய அம்சம் மூலம் அன்றாட சூழ்நிலைகளில் புதிய சொற்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. கூகுள் கொண்டுவந்துள்ள இந்த புதிய வசதியை ஓபன் செய்யும் போது முதலில் உங்களிடம் கேள்வி கேட்கும்.

அதன்பின்பு அந்த வசதியில் உள்ள ப்ரீ-டிபைன்ட் வார்த்தைகள்(predefined set of words) மூலம் நீங்கள் பதில் அளித்து அந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம் என்ற கூறப்படுகிறது. குறிப்பாக உங்களது ஆங்கில திறனை வளர்த்துக் கொள்ள இது சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்று கூகுள் நிறுவனம் கூறுகிறது. அதேபோல் இது கூகுள் சர்ச் பக்கத்தின் டாப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

மேலும் இந்த New Speaking Practice அம்சத்தைப் பயன்படுத்த உங்களது போனில் கூகுள் ஆப் ஒபன் செய்து, வலதுபுறத்தில் இருக்கும் லேப்ஸ் ஐகான் கிளிக் செய்தால் போதும் இந்த அம்சம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த புதிய கூகுள் அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!