உலக பணக்காரர்கள் பட்டியலில் இணையும் கூகுள் சிஇஓ!

சுந்தர் பிச்சையின் தலைமையிலான கூகுள் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது.  தற்போது அவர் உலகிலேயே அதிகமாகச் சம்பளம் வாங்கும் இந்திய தலைமை நிர்வாக அதிகாரியாகத் திகழ்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் தனது பொறியியல் படிப்பை படித்து ஸ்டான்போரர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவையின் உருவாக்கத்திற்கும் முன்னேற்றத்துக்கும் பெரும் பங்கு வகித்தார் சுந்தர் பிச்சை. தொடர்ந்து படிப்படியாக முன்னேறி 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ என்ற பதவியைப் பெற்றார் இவர்.

குறிப்பாக சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்து 20 வருடங்கள் ஆகிறது. அதேபோல் 2016 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் இரு முறை டைம்ஸ் இதழில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் சேர்க்கப்பட்டிருந்த அவரின் ஆண்டு சம்பளம் ரூ.1800 கோடி என்று தெரிவிக்கப்பட்டது. பின்பு கடந்த 2022-ம் ஆண்டில் அவருக்குச் சம்பளம் ரூ.1869 கோடியாக இருந்தது. குறிப்பாக இது இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட அதிகம் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான தகவலின்படி, சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பு ரூ.8,342 கோடி) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உலகின் நிறுவனம் அல்லது தொழில் அதிபர்கள் அல்லாத கோடீஸ்வர தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகள் சிலர் மட்டுமே உள்ளனர். அதில் சுந்தர் பிச்சையின் இந்த சாதனை மிகவும் பெரிதாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் கடந்த 2022-ம் ஆண்டு அவரது நிகர மதிப்பு 1,310 மில்லியன் டாலர்கள் அல்லது ரூ.10215 கோடி என ஹூருன் பட்டியலில் மதிப்பிடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!