மார்ச் முதல் வாரத்தில் இலங்கை மக்களுக்கு வரும் நல்ல செய்தி?

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதால், மார்ச் முதல் வாரத்தில் மக்களுக்கு நல்ல செய்தி வரும் என்று நம்பப்படுகிறது.

சமீபகாலமாக டொலருக்கு நிகராக, இலங்கை ரூபாய் மதிப்பு சரிந்து வந்தது. இதனால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்க வேண்டிய சூழல் உருவானது.

ஆனால், தற்போது இலங்கை ரூபாய் மதிப்பு வலுவடைந்து வருவதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “நாட்டின் ரூபாய் மதிப்பு வலுவடைந்து வருவதால், இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டியது அவசியம்.

இந்த விலை குறைப்பின் பலன் மார்ச் முதல் வாரத்தில் மக்களுக்கு கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.

Related posts

ரூ.80,000 கோடியுடன் களமிறங்கும் அதானி குழுமம்!

ஆனந்த் அம்பானியின் மிரளவைக்கும் வாட்ச் கலெக்சன்!

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் ஜெஃப் பிசோஸ் மீண்டும் முதலிடம்