முதல் முறையாக U17 உலகக்கோப்பையை வென்று ஜேர்மனி வரலாற்று சாதனை!

U17 கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஜேர்மனி அணி பெனால்டி ஷூட்டில் பிரான்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்தோனேசியாவில் U17 ஆடவர் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் நடைபெற்றது.
தென்கிழக்கு ஆசிய நாட்டில் U17 உலகக்கோப்பை நடப்பது இதுவே முதல் முறை ஆகும்.
பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இரு அணிகளும் மோதிய இறுதிப்போட்டி Stadion Manahan மைதானத்தில் நேற்று நடந்தது.
பரபரப்பாக தொடங்கிய இப்போட்டியில் 29வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஜேர்மனியின் பிருன்னர் (Brunner) கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதியில் ஜேர்மனி வீரர் டார்விச் (Darvich) சிறப்பாக செயல்பட்டு கோல் (51வது நிமிடம்) அடித்தார்.
அதற்கு பதிலடியாக 53வது நிமிடத்திலேயே போயாப்ரே (Bouabre) கோல் அடித்தார்.
பின்னர் ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் அமௌகவ் (Amougou) அபாரமாக கோல் அடித்தார். ஆனால் மேற்கொண்டு கோல்கள் விழாததால் ஆட்டம் டிரா ஆனது.
இதனால் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் ஜேர்மனி கோல் கீப்பர் மிரட்டலாக செயல்பட்டு கோல்களை தடுத்ததால், அந்த அணி 4-3 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
இதன்மூலம் முதல் முறையாக U17 உலகக்கோப்பையை வென்று ஜேர்மனி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
U16 கோப்பையுடன் சேர்த்து நைஜீரியா 5 முறையும், பிரேசில் 4 முறையும், மெக்சிகோ மற்றும் கானா தலா 2 முறையும் உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளன.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!