க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சைக்கு மொத்தம் 346,976 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 281,445 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65531 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இதேவேளை சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கமைய, 4 இலட்சத்து 52 ஆயிரத்து 979 பரீட்சாத்திகள் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர் எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!