ஜனாதிபதியால் வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் பல துறைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானியின் பிரகாரம், அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள துறைகளாக மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் வழங்கல் மற்றும் விநியோகம் காணப்படுகின்றது.

சுங்க கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 235) நோக்கங்களுக்காக வரையறுக்கப்பட்டுள்ளபடி, எந்தவொரு துறைமுகத்திலும் உள்ள கப்பல்களில் இருந்து உணவு அல்லது பானம், அல்லது நிலக்கரி, எண்ணெய் அல்லது எரிபொருளின் பொருட்களை வெளியேற்றுதல், தரையிறக்கம், களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் அகற்றுதல்

விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் உட்பட விமான போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!