பிரான்ஸ் பிரதமராக கேப்ரியல் அட்டல்

பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து 34 வயதான கேப்ரியல் அட்டல் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.

பிரான்ஸ் அதிபராக பதவி வகிப்பவர் இமானுவேல் மேக்ரான். சமீப காலமாக அந்நாட்டு மக்கள், அவர் மீது அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வந்தன.

இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் ஆக இருந்த எலிசபெத் போர்ன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதன்படி பிரான்சின் 2 ஆவது பெண் பிரதமர் என்ற பெருமைக்குரியவர் எலிசபெத் போர்ன்.

இதனை தொடர்ந்து கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டலை பிரதமராக நியமித்துள்ளார் அதிபர் மேக்ரான்.

34 வயதான கேப்ரியல் அட்டல் ஓர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதுடன் பிரான்ஸின் இளம் பிரதமர் என்ற பெருமைக்குரியவரானார். மேலும் ஓரினச்சேர்க்கையாளர் ஒருவர் பிரான்ஸ் பிரதமர் ஆவது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிட்டதக்கது.

 

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!