விடுமுறை நாட்களில் எரிபொருள் விநியோகம் தடையின்றி வழங்கப்படும்!

விடுமுறை நாட்களில் தடையின்றி எரிபொருள் விநியோகம் இடம்பெறுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அடுத்த 12 மாதங்களுக்கு போதுமான எரிபொருள் சரக்குகளை கொண்டு வர அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தகவலை அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். புதிய எரிபொருள் நிலையங்களை நிறுவுவதற்கு பல விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். அத்தோடு எரிபொருள் விற்பனை ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளதாக ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

மேலும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் மூன்று வீத கமிஷனில் 18 வீத வற் (VAT) வரியை நிறுத்துமாறு அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த கோரிக்கைக்கு உடன்பாடு ஏற்படாவிட்டால் நாளை(09) எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் ஒன்றிணைந்து முக்கிய தீர்மானமொன்றினை எடுக்க ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!