வடக்கில் வீடற்ற மக்களுக்கு இலவச வீடுகள்: டக்ளஸ் தேவானந்தா!

இலங்கையில் வடக்கில் வீடற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக, யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(28) நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உரையாற்றும் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குறித்த குழு கூட்டமானது கடற்றொழில் அமைச்சரும் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வடக்கின் ஆளுநரும் மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவருமான திருமதி சார்ள்ஸின் பிரசன்னத்துடன் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ் மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபனின் ஒழுங்கு படுத்தலில் ஆரம்பமான மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி மற்றும் அதனூடாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன.

இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் வீடற்ற மக்களுக்கு சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கை குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சூரிய கலன்களின் மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறித்த வீடுகள் அமைக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் பயனாளர்களுக்கு சுமார் 45 இலட்சம் பெறுமதியான 750 சதுர அடி விஸ்தீரணமுள்ள கல் வீடுகள் பயனாளர்களுக்கு கிடைக்கவுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!