கருக்கலைப்புக்கு ஒப்புதல் அளித்த பிரான்ஸ்!

பிரான்ஸ் நாடாளுமன்றம் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

பிரான்ஸில் பெண்கள் கருவைக் கலைப்பதற்கு சட்ட உத்தரவாதம் அளிக்கும் வகையில், அரசமைப்பின் பிரிவு 38யில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டு அமர்வில், இதற்கான மசோதா தேசிய பேரவை மற்றும் செனட் அவைகளில் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 780 உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதன்மூலம், அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாகப் பதிவு செய்த முதல் நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.

இதற்கு முன்பு அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு வழங்கப்பட்டு வந்த அரசமைப்பு சட்ட உரிமையை, 2022யில் அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த நிலையில் பாரிஸில் திரண்ட மக்கள் இம்மசோதாவுக்கு வரவேற்பு அளித்து, பாடல் பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், ”பிரான்சில் கருக்கலைப்புக்கு அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாப்பு அளிக்கப்படும்” என உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!