ஜேர்மனியை சேர்ந்த ஒருவர், கடவுச் செல்லை மறந்ததால், ரூ.2,095 கோடி மதிப்பிலான பிட்காயின்களை இழக்க உள்ளதால், கடும் வேதனையில் உள்ளார்.
ஸ்டீபன் தாமஸ் என்பவர் பிட்காயினில் முதலீடு செய்வதற்காக கடந்த 2011ம் ஆண்டு சுமார் 7,002 பிட்காயின்களை வாங்கியுள்ளார்.
இந்த பிட்காயின் முதலீடுக்கான கடவுச்சொல்லை அயர்ன்கீ என்படும் ஹார்டிரைவ் ஒன்றில் பாதுகாத்து வந்துள்ளார். ஆனால், அந்த ஹார்ட்ரைவின் கடவுச் சொல்லை இவர் மறந்துள்ளார்.
ஹார்ட்ரைவ் திறப்பதற்கு 10 முறை மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும். இதில் அவர் 8 முறை தப்பான கடவுச் சொல்லையே பதிவிட்டுள்ளார்.
இன்னும் 2 வாய்ப்புகளே உள்ளது. தற்போது அவர் வாங்கியிருந்த பிட்காயினின் மதிப்பு ரூ. 2,095 கோடிக்கு மேல் உள்ளது. ஆரம்பத்தில் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய அவர் தற்போது கோடிக்கணக்கில் லாபம் பார்த்துள்ளார்.
ஆனால், அதை அனுபவிக்க முடியாமல், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்.