பிரித்தானிய இளவரசியின் கவனத்திற்கு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி ஆனுக்கு, இலங்கைவாழ் மலையக தமிழர் மற்றும் குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் இருக்கின்ற, அவரது பிரித்தானிய முடியரசின் பாரிய கட்டுப்பாட்டை  நினைவுறுத்துவதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சென்னையில் அயலக தமிழர் மாநாட்டில் தமிழக அரசின் அழைப்பின் பேரில் கலந்துக்கொண்டுள்ள மனோ கணேசன் சென்னையிலிருந்து தனது எக்ஸ் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை, பிரித்தானியா வரலாற்றில் கறுப்பு பக்கம், பெருந்தோட்ட மக்களின் அத்தியாயம்தான். இலங்கையின் ஏனைய மக்களுடன் ஒப்பிடும்போது கல்வி, சுகாதாரம், காணியுரிமை, வீட்டுரிமை, தொழிலுரிமை ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய தரவுகளை கொண்ட தமிழ் பெருந்தோட்ட வதிவாளர்களின், குறை வளர்ச்சி தொடர்பிலான பிரித்தானிய முடியரசின் வரலாற்று கடப்பாட்டை இளவரசி ஆன் ஏற்க வேண்டும்.

நலிவுற்ற பிரிவினரான நமது மக்கள் தொடர்பிலான குற்றச்சாட்டு பட்டியலை இளவரசி ஆன் மீது சுமத்த நான் விரும்பவில்லை. ஆனால் இந்த கறுப்பு பக்கம் தொடர்பான நினைவூட்டலை நான் எடுத்து கூற விரும்புகிறேன்.

இன்று இந்திய வம்சாவளி மலையக தமிழர் என்று இனரீதியாக அழைக்கப்படும் இம்மக்கள், பிரித்தானிய முடியரசின் பிரதிநிதிகளான கிழக்கிந்திய கம்பனியால் 1823ம் ஆண்டு முதல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டவர்கள். இன்றும் கூட, எமது உழைக்கும் மக்கள் பெருந்தோட்ட முகாமை நிறுவனங்களுடன் பின்னி பிணைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!