கனடாவில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு! தடை நீடிக்குகிறது

கனடாவில் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கனேடியர்கள் அல்லாதவர்கள் கனடாவில் வீடு வாங்குவதற்கு கடந்த 2022ம் ஆண்டு அந்நாட்டு அரசு தடை விதித்தது.

இந்த தடை2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கனேடியர்கள் அல்லாதவர்கள் கனடாவில் வீடு வாங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை 2027, ஜனவரி 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கனடா நிதியமைச்சரான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “இந்த தடையை நீட்டிப்பதன் மூலம், பணக்காரர்கள் கனடாவில் வீடுகளை வாங்கிவிட்டு, பின் அதை விற்று லாபம் பார்க்க முடியாது. கனேடியர்களுக்கு இந்த தடை நீட்டிப்பு பெரிதும் உதவியாக இருக்கும். கனேடிய குடும்பங்கள் வாழ்வதற்கு அவை பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறோம்” என்றார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!