அமலுக்கு வந்தது பாரதிய நியாய சன்ஹிதா!

ஜூலை ஒன்றாம் தேதியான இன்று மத்திய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்த நிலையில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த ஐபிசி, சிஆர்பிசி சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது இந்தியாவிலேயே முதன் முதலாக பதிவு செய்யப்பட்ட வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய டெல்லியில் சாலையோர வியாபாரி மீது தான் இந்த முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது திங்கட்கிழமை அதிகாலை 12:15 மணிக்கு மத்திய டெல்லியில் சாலையோர வியாபாரி பொதுமக்களுக்கு இடையூறாக கடை அமைத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த பங்கஜ் குமார் என்ற நபர்இடெல்லி ரயில் நிலையம் அருகே நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சாலையில் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குட்கா விற்பனை செய்ததை கண்டறிந்தனர்.

இதையடுத்து அவர் மீது புதிய குற்றவியல் கோட் பிரிவு 285ன் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்த குற்றத்துக்கு, ஐயாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எஃப்ஐஆர் படி ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு பாலத்தின் கீழ் பங்கஜ் தனது கடையை நேற்றிரவு நிறுத்தியதாகக் கூறுகிறது.

அந்த நபர் தண்ணீர், பீடி, சிகரெட் விற்பனை செய்து வருவதால், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததால், கடையை சாலையில் இருந்து அகற்றுமாறு சப்-இன்ஸ்பெக்டர் பலமுறை கேட்டும், அவர் ஏற்கவில்லை. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் இ-பிரமன் அப்ளிகேசனை பயன்படுத்தி வீடியோவை எடுத்து அதன் மூலம் வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!