விஸ்வரூபம் எடுக்கும் போராட்டம்! பாஜகவுக்கு சிக்கல்?

இந்தியாவில் ஒன்றிய அரசுக்கு எதிராக டில்லியை நோக்கி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்றிய அரசுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு ‘சம்யுக்தா கிசான் மோர்ச்சா’, ‘கிசான் மஜ்தூர் மோர்ச்சா’ உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்துவதால், இந்த விவசாய அமைப்பினர் இன்று(பிப்.13) டெல்லியை நோக்கி, ‘டெல்லி சலோ’ என்ற பேரணியை தொடங்கினார்.

மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், விவசாயிகளின் இந்த போராட்டம் பாஜகவுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், இந்த பிரச்சனையை பெரிய அளவில் வெடிக்கவிடாமல் முடிந்த அளவிற்கு முடிக்க பார்க்கிறது. ஆனால், விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு அமைச்சர்களிடம் நடக்கும் பேச்சுவார்த்தை திருப்தி இல்லாததால், போராட்டம் தொடர்கிறது.

அவர்கள் டெல்லி உள்ளே வந்துவிட்டால், பிரச்சனை இன்னும் பெரிதாக வெடிக்கும் என்பதால், விவசாயிகள் பஞ்சாப்- ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, காவல்துறையினர் அவர்கள் மீது கண்ணீர்புகைகுண்டு வீசி கலைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும், அவர்கள் டிராக்டர் போன்ற விவசாய இயந்திரங்களுடன் வருவதால், அவர்கள் டில்லி எல்லைக்குள் நுழையாமல் இருக்க, ஆங்காங்கள் பள்ளங்கள், குழிகள் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இரும்பு தடுப்புகளும் வைக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த விவசாயிகள் போராட்டம் வன்முறையாக மாறவும் வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!