சிறுமியை வன்கொடுமை செய்த பிரபல கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டு சிறை

நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேனுக்கு பாலியல் வழக்கில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நேபாள கிரிக்கெட் அணியில் சிறந்த பந்துவீச்சாளராக விளங்குபவர் சந்தீப் லாமிச்சேன் (Sandeep Lamichhane).

இவர் 51 ஒருநாள் போட்டிகளில் 112 விக்கெட்டுகளும், 52 டி20 போட்டிகளில் 98 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

லமிச்சேனின் சிறந்த பந்துவீச்சு 5/9 (டி20) மற்றும் 6/11 (ஒருநாள்) ஆகும்.

கடந்த ஆண்டு ஆகத்து மாதம் இவர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது.

17 வயது சிறுமி ஒருவர் லமிச்சேன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பொலிஸில் புகார் கூறியிருந்தார்.

அவரது புகாரில் கடந்த ஆகத்து 21ஆம் திகதி காத்மாண்டு ஹொட்டல் அறையில் வைத்து, லமிச்சேன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட லமிச்சேன், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி அவர் குற்றவாளி என நிரூபணமானதால் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பட்டுள்ளது.

முன்னதாக, தன் மீதான குற்றச்சாட்டினால் லமிச்சேன் நேபாள கிரிக்கெட் வாரியத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சந்தீப் லமிச்சேன் கடைசியாக கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக விளையாடி இருந்தார்.

மேலும், ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடிய முதல் நேபாள வீரர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!