பிரபல நடிகையின் 30வது பிறந்தநாள்..3 கோடியில் தங்கமுலாம் கேக் வெட்டி கொண்டாட்டம்

பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுட்டலா 3 கோடி மதிப்பில் கேக் வெட்டி கொண்டாடியது வைரலானது.

2013ஆம் ஆண்டில் வெளியான சிங் சாப் தி கிரேட் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஊர்வசி ரவுட்டலா. அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

 

தமிழில் 2022யில் வெளியான லெஜெண்ட் படத்திலும் இவர் நடித்திருந்தார்.

பிரபல மொடலான இவர் 2015ஆம் ஆண்டில் மிஸ் திவா-மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்றார்.

பிரபல பாடகர் யோ யோ ஹனி சிங் உடன் ஊர்வசி ரவுட்டலா தற்போது இணைந்து ‘செகண்ட் டோஸ்’ என்ற இசை ஆல்பத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் தனது 30வது பிறந்தநாளை ஊர்வசி ரவுட்டலா கொண்டாடினர். அவருக்கு யோ யோ ஹனி சிங் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கேக் ஒன்றை பரிசளித்தார்

இது 24 கேரட் கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த கேக்கினை வெட்டி ஊர்வசி ரவுட்டலா கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியானது.

தங்க முலாம் பூசப்பட்ட 3 கோடி மதிப்பு கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதா என பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!