ஒன்லைன் சூதாட்டத்தால் பலியான குடும்பம்! காவலரின் முடிவால் நேர்ந்த பரிதாபம்

தெலுங்கானாவில் ஆன்லைன் சூதாட்டத்தால் கடனாளியாகி, விரக்தியில் குடும்பத்தை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட காவலரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் சித்திப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் மெய்காவலராக பணியாற்றி வந்தவர் ஆயுதப்படையை சேர்ந்த நரேஷ்.
இவருக்கு சைதன்யா என்பவருடன் திருமணம் ஆகி, இருவருக்கும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
நரேஷ் ஒன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகும் அளவிற்கு விளையாடியுள்ளார்.
அவர் சம்பள பணத்தை மாதக்கணக்கில் சூதாடியுள்ளார்.
மேலும் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியும் விளையாடி வந்துள்ளார்.
விட்ட பணத்தை பிடிக்கும் நோக்கில் வட்டிக்கும் கடன் வாங்கி விளையாடியுள்ளார்.
இதனை அவரது மனைவி சைதன்யா கண்டித்துள்ளார்.
இந்த நிலையில், ஒன்லைன் சூதாட்டத்தினால் பணத்தை இழந்து கடனாளியான விரக்தியில், மகன், மகள் மற்றும் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
ஒன்லைன் சூதாட்டம், ஒரு அரசு ஊழியரின் குடும்பத்தையே காவு வாங்கிய சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!