தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் பரபரப்பு! வெளியேறிய ஆளுநர்

தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரில், உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

2024ம் ஆண்டிற்கான சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் உரை முடியும்போது, தேசிய கீதம் இசைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால், தேசிய கீதம் ஒலிக்காததால் உரையின் பல பகுதிகளை படிக்காமலே அமர்ந்தார். தமிழ்நாட்டு அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் ஒருவர் புறக்கணித்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

இதைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தபோது, அரசு தயாரித்த உரை மட்டுமே அவை குறிப்பில் இடம் பெறும். ஆளுநர் பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என அவர் கூறினார்.

இதனால், கோபத்தில் ஆளுநர் பாதியிலேயே சட்டபேரவையை விட்டு வெளியேறினார். இதனால், ஆளுநர் இல்லாமலே தீர்மானம் சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

திமுக அரசுக்கு, ஆளுநருக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், அந்த மோதல் இன்று சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.

ஆனால், இது குறித்து திமுகவினர் கூறும்போது, “ஆளுநர் பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறார். அவர் நடந்துகொண்ட விதம் தவறு” என குற்றம்சாட்டினர்.

 

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!