கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று தீர்ப்பு!

புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தான் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கில் இன்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால் ஆம்ஆத்மியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார். இந்நிலையில் தான் டெல்லியில் கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது.

இதில் முறைகேடு புகார் எழுந்தது. இதையடுத்து சிபிஐ விசாரணை தொடங்கியது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது தெரியவந்த நிலையில் அமலாக்கத்துறையும் விசாரணையில் களமிறங்கியது.

வழக்கு தொடர்பாக ஆம்ஆத்மி கட்சியினர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரும் அடிப்பட்டது. சிபிஐ அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியது. அதன்பிறகு அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதையடுத்து கடந்த 21ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். மேலும் அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரித்தது.

இந்த விசாரணையை தொடர்ந்து 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சிறையில் இருந்தாலும் கூட அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகவே தொடர்கிறார்.

இத்தகைய சூழலில் தான் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. அதன்படி இன்று கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

இன்று மதியம் 2.30 மணிக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ணா காந்த சர்மா தீர்ப்பு வழங்குகிறார். இந்த தீர்ப்பை ஆம்ஆத்மி கட்சியினர் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!