இங்கிலாந்து 246க்கு ஆல்அவுட்! ஜெய்ஸ்வால் மிரட்டல் அரைசதம்

இங்கிலாந்து 246க்கு ஆல்அவுட்! ஜெய்ஸ்வால் மிரட்டல் அரைசதம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக 76 ரன்கள் விளாசினார்.

ஹைதராபாத்தில் நடந்து வரும் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

தொடக்க வீரர்களான ஸாக் கிராவ்லே (20) மற்றும் டக்கெட் (35) இருவரையும் அஸ்வின் வெளியேற்றினார்.

அதனைத் தொடர்ந்து ஓலி போப்பையும் (1), ஜோ ரூட்டையும் தனது பந்துவீச்சில் ஜடேஜா ஆட்டமிழக்க செய்தார்.

அதன் பின்னர் ஜானி பேர்ஸ்டோவ் 37 ரன்கள் எடுத்த நிலையில் அக்சர் படேல் ஓவரில் போல்டனார். பின்னர் இங்கிலாந்து அணி ரன் எடுக்க திணறியது.

ஆனாலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் விளாசி கடைசி விக்கெட்டாக வெளியேறினார்.

இந்திய அணியின் தரப்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியில் மிரட்டி, 70 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 14 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!