கீரன் பொல்லார்ட்டை பயிற்சியாளராக நியமித்த இங்கிலாந்து!

Kieron Pollard of West Indies talks to the press after the toss during the 3rd T20I between West Indies and England at Kensington Oval, Bridgetown, Barbados, on January 26, 2022. (Photo by Randy Brooks / AFP) (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)

இங்கிலாந்து அணி நிர்வாகம் மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் வீரர் கீரன் பொல்லார்ட்டை துணை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளதால் இதற்காக ஒவ்வொரு அணியும் தயாராகி வருகின்றன.

சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை 2-3 என இழந்த இங்கிலாந்து அணி, உலகக்கோப்பையை கைப்பற்ற புதிய வியூகத்தை அமைத்துள்ளது.

அதாவது, மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் வீரர் கீரன் பொல்லார்ட்டை (Kieron Pollard) துணை பயிற்சியாளராக இங்கிலாந்து நிர்வாகம் நியமித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளின் மைதானங்களின் சூழல், Pitch-யின் செயல்பாடுகள் குறித்து கவனம் கொண்டுள்ளதால் இங்கிலாந்து அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

West Indies’ Kieron Pollard (left) celebrates taking the wicket of South Africa’s Colin Ingram (not pictured) during the ICC Champions Trophy match at The SWALEC Stadium Cardiff.

இது கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இங்கிலாந்தின் புத்திசாலித்தனமான நகர்வாகவும் பார்க்கப்படுகிறது. 600க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவத்தை பொல்லார்ட் கொண்டுள்ளார்.

மேலும், மேற்கிந்திய தீவுகள் குறித்து நுணுக்கமான அறிவை பெற்றுள்ள பொல்லார்ட், மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகவும் உள்ளார். எனவே இங்கிலாந்து அணியை அவர் சிறப்பான முறையில் வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!